Home / உலகம் / சீனா ஆண்களுக்காக ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்

சீனா ஆண்களுக்காக ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்

சீனாவுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில்,

அண்டை நாடுகளில் இருந்து உணவு, போதை, இரும்பு போன்ற பொருட்களை மட்டுமே திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்து வந்த சீனர்கள் தற்போது பெண்களையும் அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில், தற்போது ஒரு குழந்தை கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பலரும் சிறுவர்களை காப்பாற்றிக்கொண்டு, பெண்களை கைவிடுகின்றனர்.

இதனால் அங்கு தற்போது 3.3 கோடிக்கும் அதிகமாக ஆண்களைவிடப் பெண்கள் குறைவாக உள்ளனர். இதனால் திருமணம் செய்வதற்கு பெண்கள் இல்லாமல் ஆண்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கடத்தல் மன்னர்கள், அண்டை நாடுகளில் இருந்து அதிகமான பெண்களையும், சிறுமிகளையும் கடத்தி வரும் பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்து பெண்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதிலும் மியான்மர் போரில் காயமடைந்த காஷின் மற்றும் ஷான் மாநிலங்களில் வறுமையில் வாழும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் கடத்தி வரப்படுகிறார்கள் என்றும் அதிர்ச்சி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நல்ல சம்பளம் என்று பெரும் ஆசை வார்த்தை காட்டி சிலரையும், வேறு சிலரை வலுக்கட்டாயமாகவும் கடத்தி வருகின்றனர்.

கடத்தப்பட்டவர்களில், பெரும்பாலும் சிறுமிகளையே சீன ஆண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இவ்வாறு கடத்தப்பட்டு வரும் பெண்கள், சிறுமிகள் சீனா ஆண்களுக்குத் தோற்றத்திலும், அழகிலும் பிடிக்காவிட்டால் பக்கத்தில் இருக்கும் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காகவும், திருமணத்திற்காகவும் கொண்டு செல்லப்படுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த தகவலினை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஸ்கூல் இன் ஆய்வின் முன்னணி எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

ஏலியனை பற்றி வெளியான புதிய தகவல்கள்! விண்கலத்தை கண்டுபிடித்து சாதனை

விமானத்தை இயக்கும் விமானிகளும் விமானத்தில் பயணிப்போரும் அவ்வப்போது வேற்றுகிரக வாசிகளை பார்ப்பதாக கூறுவது செய்திகளில் நாம் பார்த்திருப்போம். எலியன்ஸ் என்று …