Home / விநோதம் / காரில் வந்த மர்ம கும்பல் செய்த அதிர்ச்சி செயல்! சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அரிய காட்சி

காரில் வந்த மர்ம கும்பல் செய்த அதிர்ச்சி செயல்! சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அரிய காட்சி

திருட்டை வேலையாக, தொழிலாக, கூலிக்காக, உதவிக்காக, நட்புக்காக என்று பல விதமாக, பல சூழலில் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். திருடி திருந்தியவர்களும் இருக்கிறார்கள், திருத்திக் கொள்ள முடியாததால் திருடியவர்களும் இருக்கிறார்கள்.

என்னதான் திருட்டை தடுக்க பொலிஸார் புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், திருடர்களும் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போது நாட்டில் திருடர்களை மிக விரைவாக கண்டுப்பிடிக்க பெரிதும் கைகொடுப்பது சிசிடிவி கேமராக்கள் தான். சி.சி.டி.வி. கேமரா மூலம் சிக்கிய ஒரு திருட்டு காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதில் நான்கு பேர் கொண்ட கும்பல் தெருவில் கட்டியிருந்த பசு மாட்டை காரின் பின்புறத்தில் ஏற்றி நூதனமான முறையில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த காட்சியானது அங்கிருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இப்படி தைரியாமாக மாட்டையே கடத்தியுள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

நீர் நாயின் மூக்கில் சிக்கிய மிக நீளமாக மாட்டியது இது என்ன!… அதிர்ச்சியில் குழம்பி தவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர் நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் …