Home / இந்தியா / மகள் திருமண நேரத்தில் வெளியான அம்பானி குடும்பத்தாரின் இன்னொரு முகம்: வைரலாகும் புகைப்படங்கள்

மகள் திருமண நேரத்தில் வெளியான அம்பானி குடும்பத்தாரின் இன்னொரு முகம்: வைரலாகும் புகைப்படங்கள்

அம்பானி குடும்பத்தில் திருமண நிகழ்வு நடக்கவிருக்கும் நிலையில் பொது மக்களுக்கு அம்பானி குடும்பத்தார் தங்கள் கையால் உணவுகளை இலவசமாக அளித்து வருகிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி – நிட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் வரும் 12-ஆம் திகதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தார் டிசம்பர் 7லிருந்து 10-ஆம் திகதி வரை ”அன்ன சேவா” என்ற அன்னதான திட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் தினம் மூன்று வேளை பொது மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்கிறார்கள்.

இதில் கலந்து கொண்டு சாப்பிடுபவர்களில் பெரும்பாலானோர் உடல் ஊனமுற்றவர்கள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தங்கள் கரங்களால் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி மற்றும் மகள், மகன்கள் உணவுகளை பரிமாறுகிறார்கள்.

5,100 பேர் வரை இந்த அன்ன சேவாவில் கலந்து கொள்கிறார்கள்.

என்ன தான் பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், தங்கள் கைகளால் அம்பானி குடும்பத்தார் மகிழ்ச்சியாக மற்றவர்களுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

Check Also

சசிகலாவுக்கு கட்டம் சரியில்லை: கழுத்தை நெரிக்கும் கிடுக்குபிடி விசாரணைகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை வரும் டிசம்பர் 13 ஆம் தேதி ஆஜர் படுத்தும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் …